Categories
தேசிய செய்திகள்

பிறந்தநாளன்று 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய தோழி அழைத்ததாக  கூறி கடந்த  கடந்த மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது தோழியுடன் தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் கொண்டாட்டத்திற்கு பின் அங்கிருந்து சொந்த ஊரான அவுரங்காபாத் திரும்பினார். அப்போது  வழியில்  4 பேர் கடத்தி சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து ஊர்  திரும்பிய அவர் இதுபற்றி வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அடிக்கடி தனிமையில் அழுதபடியே  இருந்துள்ளார்.

Related image

இந்நிலையில் அவரது பிறப்புறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்தது. பின்னர் அன்று நடந்த உண்மை சம்பவம் பற்றி விளக்கமாக பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோர் போலீசில் போலீசார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து யாரென்று அடையாளம் தெரியாத 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |