பூவனூர் ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு திமுக வேட்பாளர், பாமக வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் ஐந்து பேர் போட்டியிட்டனர். இந்த ஒன்றியத்தில் 4 ஆயிரத்து 560 வாக்குகள் பதிவாகின. இதில், பாமக சார்பில் போட்டியிட்ட பூங்கோதை செல்வம் ஆயிரத்து 150 வாக்குகள் பெற்றார்.
திமுக சார்பில் போட்டியிட்ட பிரீத்தி மோகன் 2 ஆயிரத்து 203 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். வெற்றி பெற்றது குறித்துப் பேசிய பிரீத்தி மோகன், ‘நான் தற்போது முதுகலை பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் படித்து வருகிறேன். எனக்கு 22 வயது தான் ஆகிறது.
எனது மாமனார் திமுகவின் ஆரம்பகால உறுப்பினர். அவரைப்பார்த்து திமுக மீது பற்றுகொண்ட நான் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவர் வழியில் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். கடந்த 10 ஆண்டுகளாக ஊரகப்பகுதியில் ஆளுகிற ஆட்சி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை’ என்றார்