Categories
உலக செய்திகள்

“இவர் கூட தான் வாழ போறேன்!”…. தாத்தாவுடன் லூட்டி அடிக்கும் பியூட்டி…. நெட்டிஷன்கள் ஷாக்….!!!!

அமெரிக்காவில் 23 வயது அழகிய இளம்பெண் ஒருவர் 57 வயது முதியவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் Peter-ஐ திருமணம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் டேட்டிங் செய்வது, ஒன்றாக வெளியே சுற்றுவது என இருவரும் தங்களுடைய நாட்களை சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர். இவர்களுடைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இளம் காதலியான Alyssa Renee-க்கு பீட்டர் பல கோடி மதிப்புள்ள கிஃப்ட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம்.

அதோடு மட்டுமில்லாமல் Alyssa Renee-க்கு பீட்டர் அதிக பணத்தை செலவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் Alyssa Renee வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, பீட்டரே அவருடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து வருகிறாராம். இந்த நிலையில் Alyssa Renee, பீட்டரை விரைவில் திருமணம் செய்யப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |