Categories
உலக செய்திகள்

“காதலி கத்தியால் குத்தி கொலை” சூட்கேஸில் அடைத்து காதலன் வெறிச்செயல்…!!

ரஷ்யாவில் முன்னாள் காதலன் காதலியை கத்தியால் குத்தி கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

ரஷ்யாவைச் சேர்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற 24 வயது பெண்  இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். காரணம் எகெடெரினா  90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

Image result for Ekaterina Karaglanova

இந்நிலையில் சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பின், அவரது பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட போது, மாஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் இருந்த பெரிய சூட்கேசில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

Image result for Ekaterina Karaglanova

பின்னர் போலீசார் இது குறித்து கூறியதாவது, “கொலை சம்பவத்தில் எகெடெரினாவின் முன்னாள் காதலரை கைது செய்துள்ளோம். காரணம் கொலை சம்பவம் நடந்த அன்று சிசிடிவி காட்சியை   பார்த்ததில் முன்னாள்  காதலர்  சூட்கேசுடன் செல்வது தெரியவந்தது.

Image result for Ekaterina Karaglanova

தன் பிறந்த நாளன்று புதிய காதலருடன் கொண்டாட திட்டமிட்ட எகெடெரினாவை முன்னாள் காதலர் கொலை செய்துள்ளார். எகெடெரினாவின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும், அவரது கழுத்து கொடூரமான அறுக்கப்பட்டு  உள்ளது என்று தெரிவித்தனர். கொலைக்கான காரணம் குறித்து முன்னாள் காதலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |