Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த 25 வயது கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது… ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 வயது கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தப் கர்ப்பிணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு COVID19 தொற்று ஏற்படவில்லை என்றும், குழந்தை தற்போது தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளது என சசூன் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தூண்டியுள்ளது.

இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4,200-ஐ தாண்டியுள்ளது. நேற்று மட்டும் சுமார் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 223 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். 507 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.

மகாரஷ்டிராவில் மும்பை மற்றும் புனே பகுதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் இதுவரை 3,214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புனேவில் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நாசிக் பிரிவில் 121 பாதிப்புகளும், 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

கோலாப்பூர் பிரிவில் 40 பேருக்கு பாதிப்புகள், ஒருவர் உயிரிழந்துள்ளனர். அவுரங்காபாத்தில் இதுவரை 33 பாதிப்புகள் மற்றும் மூன்று இறப்புகள் உள்ளன. இந்த நிலையில், புனேவில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆரோக்கியமான குழந்தையை பெற்றடுத்துள்ளார்.

Categories

Tech |