Categories
உலக செய்திகள்

கொரோனா பலி – சீனாவில்3 நிமிடம் மவுன அஞ்சலி …!!

கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

As Coronavirus Explodes in China, Countries Struggle to Control ...

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,099,080 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 59,179 பேர் உயிரிழந்துள்ளனர். 228,938 பேர் குணமடைந்த நிலையில் 810,963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,391 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Coronavirus live updates: Outbreak is 'grave concern' as ...

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. போக்குவரத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மக்கள் நின்றபடி கொரோனா வைரஸால் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

Categories

Tech |