தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘உயிரே’. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தைய்ய தைய்யா பாடலின் மூலம் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. இவர் 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான்கானின் சகோதரரை திருமணம் செய்து கொண்டார்.
19 வருடங்கள் கடந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அர்ஹான் என்னும் மகன் உள்ளார். தற்போது இவரும் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகனுமான பிரபல பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என தகவல்கள் வெளியானது.
49 வயதாகும் மலைகா அரோரா அவரை விட 12 வயது சிறியவரான அர்ஜுன் கபூரும் காதலிப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த வருட இறுதிக்குள் இவர்கள் இருவரும் திருமணம் செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் மலைகா அரோரா சமூக வலைதளபக்கத்தில் ”நான் சம்மதம் சொல்லிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அர்ஜுனுடன் திருமணத்திற்கு ஓகே சொல்லியதை தான் இப்படி தெரிவித்துள்ளார் என கூறி வருகின்றனர்.