Categories
தேசிய செய்திகள்

ஐயோ பாவம்… மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… “5 மாத குழந்தை பரிதாப பலி”…. 5 குழந்தைகள் தீ காயம்..!!

தெலுங்கானாவில் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத குழந்தை ஒன்று உயிரிழந்ததோடு மேலும் ஐந்து குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் பகுதியிலுள்ள ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று (அக். 20) மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தினால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 5மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.மேலும் 5 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Image result for A 5-month-old baby died and five others were injured in a fire at Shine Children's Hospital in Telangana.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்துவிட்டு குழந்தைகளை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for 3-month-old baby boy dies, 4 injured in fire in Hyderabad's

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 42 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |