Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேன் மீது பைக் மோதி விபத்து : 5 வயது சிறுவன் பரிதாப பலி… மூவருக்கு தீவிர சிகிச்சை..!!

பல்லடம் அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன்பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையத்தை அடுத்து இருக்கும் கரடிவாவி என்ற இடத்தில் சாலையோரத்தில் சரக்கு வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது.. அப்போது அவ்வழியே வந்த பைக் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த சரக்கு வேனின் பின்னால் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

மேலும் சிறுவனை வைத்து பைக் ஓட்டி வந்த மற்ற 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.. இதனைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக இந்த விபத்து குறித்து காமநாயக்கன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை உடனே மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன்பின் நிலைமை மோசமானதால் தீவிர சிகிச்சையளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் மூவரும் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே சம்பவ இடத்தில் பலியான சிறுவனது  உடலைக் கைப்பற்றிய போலீசார்  பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தசம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் பலியான சிறுவனின் பெயர் கபிலேஷ் (வயது 5) என்பதும் மற்றும் அவனது உறவினர்களான சிவகுமார் (வயது 30) , நவீன் (வயது 12) , ஜீவா (14) ஆகிய 3 மூவரும் பைக்கில் பல்லடத்திலிருந்து பொள்ளாச்சியை அடுத்து இருக்கும் ஜமீன் ஊத்துக்குளி செல்லும் வழியில் இந்த விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. சிறுவன் பலியான  சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |