வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ஐந்து வயதில் கிரன்குமார் என்னும் மகன் இருந்தார். இவருக்கு கடந்த நான்கு நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் இருந்துவந்த நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காய்ச்சல் குறையாததால் குழந்தையின் பெற்றோர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் தற்போது கிரன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 300-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.