ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பிற்பகலில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்தபோது வலி தாங்கமுடியாமல் சிறுமி அலறியுள்ளார்.
இந்தச் சத்தம் கேட்டு அப்பகுதியில் வேலைசெய்துகொண்டிருந்த சிறுமியின் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்தவர் தப்பியோடினார். ரத்தக் காயங்களுடன் இருந்த சிறுமியை மீட்டு உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் காவல் துறையினர் விரைந்துசெயல்பட்டு தப்பியோடியவரை கைதுசெய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டவரின் வயது 20 எனத் தெரியவந்துள்ளது. மேலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.