Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன உளைச்சல்… மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..!

போதிய வருமானம் இல்லாததாலும், கொரோனா பயத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளான நபர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்தார்..

சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி ஹைரோட்டில் வசித்து வருபவர் பரேஷ் அஜ்மீரா..  இவருக்கு வயது 55 ஆகிறது..  இவர் சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவில் சொந்தமாக கணினி பழுதுநீக்கும் கடை ஒன்றை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளும் இருந்து வந்துள்ளன.

இந்த சூழலில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டு இருப்பதால், தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று சென்னையில் காட்டு தீயைப்போல வேகமாகப் பரவி வருவதால் நோய் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோம் என்ற  பயத்தில் கடந்த சில நாட்களாக, இவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென தன்னுடைய கடை இருக்கும் கட்டடத்தின் 2ஆவது தளத்திற்கு சென்று, அங்கிருந்து பரேஷ் அஜ்மீரா கீழே குதித்தார்.. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யானைகவுனி போலீசார், பரேஷின் உடலைக் கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பர்வேஷ் எழுதிய கடிதம் ஓன்று சிக்கியது.. அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |