உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் ஆசிரமம் ஒன்று உள்ளது. அதில் பிரயாக்ராஜ் நகரின் கர்ஜனா பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் தங்கி உள்ளார். இந்நிலையில் அவர் கோமதி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் தாவரத்தை கிளப்பியுள்ளது. அதாவது கடந்த நான்காம் தேதி போதை பொருட்கள் சிலவற்றை தனக்கு கொடுத்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார் .அதன் பிறகு சுயநினைவு இல்லாத பெண்ணை ஆசிரமத்தில் உள்ளவர்களில் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது பற்றி துர்வாசா, சோட்டோ மாவ்னி, பர்ஷி மாவ்னி மற்றும் மன்மோகன் என நான்கு பேரு மீது அந்தப் பெண் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தது மட்டுமல்லாமல் சம்பவத்திற்கு பின்னர் அந்த பெண்ணை கொலை செய்து விடுவோம் என நான்கு பேரும் மிரட்டியதாக புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசிரமவாதிகளான நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரமத்தில் பெண்ணுக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.