Categories
உலக செய்திகள்

கொரோனாவின் முதல் வேட்டை… பஹ்ரைனில் 67 வயது மூதாட்டி மரணம்!

பஹ்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்றுவந்த 67 வயதுடைய பெண்மணி மரணமடைந்தார்.

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது. இந்த வைரஸ் தொற்று வளைகுடா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளையும் தாக்கியுள்ளது. இதனால் குவைத், துபாய், சவூதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இந்நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிதீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த 6 நாடுகளில் ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் மட்டும் இதுவரை கொரோனாவின் தாக்குதலுக்கு  853 பேர் பலியாகியிருக்கின்றனர். இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்றுவந்த 67 வயதுடைய பெண்மணி மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பஹ்ரைன் நாட்டிற்கு முதல் பலியாகும்.

Categories

Tech |