Categories
தேசிய செய்திகள்

சர்வதேச வினாடி வினா போட்டி… 2ஆம் இடம் பிடித்து அசத்திய 7 வயது சிறுமி..!!

காசியாபாத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி, சர்வதேச வினாடி வினா போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்..

 உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக, இந்தியாவிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது.. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்காமல் இருக்கின்றன.. ஆனாலும், இந்தக் கொரோனா காலத்திற்கு மத்தியிலும் பல மாணவர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்..

அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஸ்வாதி சர்மா என்ற 7 வயது சிறுமி அந்த பகுதியில் இருக்கும் அமிட்டி பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கிறார்.. இந்த சிறுமி சர்வதேச அளவில் நடைபெற்ற வைல்ட் விஸ்டம் இன்டர்நேஷனல் 2020 வினாடி வினா போட்டியில் பங்குபெற்று 2ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

சர்வதேச வினாடி வினா போட்டியில் 2ஆம் இடம் பிடித்த 7 வயது சிறுமி..!

இப்போட்டியில் தெற்கு ஆசியா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நாட்டு மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.. அதுமட்டுமில்லாமல் இந்த குட்டி சாம்ப், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதனிடமும் உரையாடியுள்ளார்.. இது குறித்து குட்டி சாம்ப் ஸ்வாதி பேசுகையில், “இதே போன்று பல்வேறு வினாடி, வினா போட்டிகளில் கலந்து கொண்டு , வெற்றி பெற வேண்டும். மேலும், எனது பெற்றோரை பெருமை பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

Categories

Tech |