நன்னிலம் பகுதியில் 7 வயது சிறுமியை வியாபாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சமீபத்தில் கூட புதுக்கோட்டை அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வளையல் வியாபாரியான கதிரேசன் என்பவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து நன்னிலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.