Categories
தேசிய செய்திகள்

“என்னால் முடியும் உங்களால் முடியாதா?”… லாரியை இழுத்து அசத்தல்… இளைஞர்களுக்கு விழிப்புணர்வு… 75 வயது முதியவர்…!!

போதைப்பொருளில் இருந்து விடுபட முதியவர் ஒருவர் லாரியை இழுத்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாகத்தான் இந்தியாவிற்குள் போதைப்பொருள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீண்டு வர ஏதாவது உத்வேகம் கொடுக்க வேண்டும் என்று 75 வயதாக நிஹாங் சிங் நினைத்துள்ளார்.

இதனால் லாரியை கயிற்றால் கட்டி தனி ஒருவராக இழுத்து அசத்தி காட்டியுள்ளார். 75 வயதான என்னாலேயே லாரியை இழுக்க முடியும்போது, உங்களால் முடியாதா? என இளைஞர்களை நோக்கி நச்சென ஒரு கேள்வியையும்் கேட்டுள்ளார். மேலும், இளைஞர்களுக்கான இந்த முதியவரின்் தகவல் என்னவென்றால், “என்னால் இந்த லாரியை இழுக்க முடியும்போது, உங்களால் எதையும் செய்ய முடியும். போதைப்பொருளில் இருந்து விலகி இருங்கள். உங்களது வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள் என்பதுதான்’’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |