குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற மாணவி நீருக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பூதமங்கலம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் ரக்சனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரக்சனா வாச்சாபட்டி கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா முருகேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது சித்தியான முருகேஸ்வரியுடன் அருகிலுள்ள செயல்படாத கிரானைட் குவாரி குட்டையில் துணிகளை துவைப்பதற்காக ரக்சனாவும் சென்றுள்ளார்.
இதனையடுத்து ரக்சனா குவாரி குட்டையில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென தவறி விழுந்து தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.