Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த கோழி…. 8 அடி நீள மலைப்பாம்பு…. அதிர்ச்சியில் உறைந்த தோட்டக்காரர்….!!

தோட்டத்திற்குள் மேய்ந்து கொண்டிருந்த கோழியை விழுங்கிய 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து விட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு புளியங்கண்டி பகுதியில் தனி நபருக்குச் சொந்தமான மாந்தோப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த மாந்தோப்பில் கோழிகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென அதிகமாக சத்தம் போட்டு உள்ளது. இந்நிலையில் கோழிகளின் சத்தம் கேட்டு தோட்டக்காரர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக்  கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக அவர் பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 8 அடி நீளம் கொண்ட அந்த மலை பாம்பை பிடித்துவிட்டனர். அதன்பின் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை ஆழியாறு பகுதியில் இருக்கும் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Categories

Tech |