Categories
தேசிய செய்திகள்

தாயைப் பிரிந்து கண்ணீர் வடித்த “குட்டி யானை”…. விரட்டி விரட்டி அடித்த அரக்கர்கள்‌‌…. நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…..!!!!

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் லங்கா நகரில் ஹல்பகன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு கடந்த 12-ஆம் தேதி ஒரு குட்டி யானை ஒன்று வழி தவறி வந்துள்ளது. அந்த குட்டி யானை தன்னுடைய தாயை பிரிந்ததால் வழி தெரியாமல் கண்ணீர் வடித்துள்ளது. அப்படி தனியாக தவித்து கண்ணீர் வடித்த அந்த யானையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விரட்டி விரட்டி அடித்து வாலை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

அந்த குட்டி யானையோ அந்த அரக்கர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தன்னுடைய பிஞ்சு கால்களை வைத்துக் கொண்டு ஓட முடியாமல் ஓடுகிறது. இருப்பினும் காட்டுமிராண்டித்தனமாக யானையை விரட்டி விரட்டி அடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரின் கண்களை கலங்க வைத்துள்ளது. மேலும் தாயைப் பிரிந்து கண்ணீர் வடித்த ஒரு குட்டி யானையை கொடுமைப்படுத்திய அரக்கர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |