Categories
உலக செய்திகள்

இதற்காக கஞ்சாவை பயன்படுத்தலாம்..! பிரபல நாட்டில் வகுக்கப்பட்டுள்ள திட்டம்… நாடாளுமன்ற கீழ் சபை ஒப்புதல்..!!

மொராக்கோ நாடாளுமன்ற கீழ் சபை மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை உபயோகிப்பது குறித்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கஞ்சா பயன்படுத்துவதற்கு மொராக்கோ நாட்டில் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கஞ்சா செடிகளை சட்டவிரோதமாக அங்கு பயிரிட்டு வளர்த்து அதனை வெளிநாடுகளுக்கு கடத்துதல் உள்ளிட்ட செயல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் கஞ்சா செடிகளை பலர் மருத்துவ காரணங்களுக்காகவும் பயிரிட்டு வளர்க்கின்றனர். எனவே அந்நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. அந்த வகையில் மொராக்கோ நாட்டின் நாடாளுமன்ற கீழ் சபையில் இது குறித்த சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அந்த மசோதாவில் அழகு சாதனப்பொருட்கள், மருத்துவ காரணங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே கஞ்சாவை உபயோகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கீழ் சபை அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அந்த மசோதாவிற்கு நாடாளுமன்ற மேல் சபையும் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் சட்டமாக அந்த மசோதா நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |