திருப்பூர் மாவட்ட மக்கள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூபாய்1,552 கோடியில் நடந்து வருகிறது என தமிழக முதல்வர் தெரிவித்தார்.
நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நிறைவுசெய்த பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தொழில் துறையினர், விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் வெளியூர், வெளி மாநிலத் தொழிலாளர்களை அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கின்றோம்.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 1,120 கோடியில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. திருப்பூர் மாவட்ட மக்கள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூபாய்1,552 கோடியில் நடந்து வருகிறது. திருப்பூரை சீர்மிகு நகரமாக ரூபாய் 948 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூபாய் 250 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் நடைபெறுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. உடுமலை தொகுதியில் பண்ணை கிணறு கிராமத்தில் ரூபாய் 85 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். திருப்பூரில் ரூபாய் 336. 96 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடக்கின்றது.மேலும் எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் பேசும் என்றால் அதற்கு உதாரணம் பொன்முடி பொன்முடி தான் என முதல்வர் தெரிவித்தார்.