ஸ்பெயினில் ஒரு இளைஞர், பெற்றோருடன் சண்டை ஏற்படும்போது ஒளிந்துகொள்வதற்காக குகை ஒன்றை உருவாக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டால் சிறிது நேரம் குழந்தைகள் கோபமாக இருப்பார்கள். அப்போது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு தோன்றும். ஆனால் எங்கு செல்ல முடியும். எனவே சிறிது நேரத்தில் மீண்டும் பெற்றோருடன் இணைந்து கொள்வார்கள்.
இது அனைத்து வீடுகளிலும் வழக்கமாக நிகழும் ஒன்றுதான். ஆனால் இங்கு ஒரு இளைஞர் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு என்ன செய்திருக்கிறார், பாருங்கள்!. ஸ்பெயினில் வசிக்கும் 20 வயது இளைஞர், பெற்றோருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனியாக குகை அமைத்து வாழ்ந்து வருகிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன் டிராக் சூட் அணிந்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது என்று என் பெற்றோர் கூறினார்கள். அப்போது எனக்கும் அவர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. எனவே அவர்களுடன் சண்டையிடும் போதெல்லாம் ஒளிந்து கொள்ள இடம் தேவைப்பட்டதால், வீட்டின் பின்புறம் மூன்று மீட்டர் பள்ளத்தில் ஒரு குகையை தோண்டினேன்.
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த குகையை நான் உருவாக்கினேன். தற்போது இதில் கழிவறை, ஹோம் தியேட்டர் மற்றும் வைஃபை போன்ற அனைத்து வசதிகளையும் வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இது அவரின் பெற்றோரை மட்டுமல்ல அனைவரையும் ஆச்சரியமடையச்செய்துள்ளது.