கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள லந்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய தம்பியான குமார் தனது இரண்டு நண்பர்களுடன் ஊருக்கு அருகில் இருக்கும் விரியாம்பட்டி கல்குவாரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குமார் முதலில் நீரில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றதால் அவன் நீரில் தத்தளித்து மூழ்கியுள்ளான். இதனைக்கண்ட மற்ற 2 பேரும் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர்கள் ஓடி வந்து உடனே காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய சிறுவனை தேடியுள்ளனர். ஆனால் வெகு நேரத்திற்கு பின்பு குமார் பிணமாக மீட்கப்பட்டுள்ளான். இதனையடுத்து சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.