கட்டிட விபத்தில் சிக்கிய சிறுவன் 2 தினங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மத்திய பிரதேச மாநிலம் லால் கேட் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்ற காரணத்தினால் அப்பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்தது. அவர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்தவர்களை மீட்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் 2 தினங்களுக்கு பிறகு 17 வயது சிறுவன் ஒருவன் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இதற்க்கு அப்பகுதியில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 7 பேர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு இருக்கும் நிலையில் பலர் இன்னும் உள்ளே சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.