செல்பி எடுக்க சென்ற தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞனை போலீசார் காப்பாற்றியுள்ளார்
ரஷ்யாவில் இருக்கும் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் வீட்டில் ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்த அன்டோன் கோஸ்லாவ் என்னும் இளைஞன் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்து 150 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். 15 நிமிடங்களுக்கும் மேலாக காப்பாற்றக் கோரி அவர் அலறிய சத்தம் யார் காதிற்கும் கேட்காத நிலையில் அப்பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல் அதிகாரி இளைஞன் தொங்குவதை பார்த்து விரைந்து வந்து காப்பாற்றியுள்ளார்.