மியான்மர் நாட்டில் நேஷனல் ஏர்லைன்ஸில் விமானம் ஒன்று நேற்று நைபிடா நகரில் இருந்து லோய்காவ் நகரை நோக்கி சென்றுள்ளது. இதில் 63 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் 27 வயது வாலிபரும் ஒருவர் ஆவார். இந்நிலையில் விமானம் லோய்காவ் நகர் நெருங்கிய போது தரையில் இருந்து சுமார் 3 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தரையில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா ஒன்று விமானத்தை துளைத்து வாலிபரின் மீது பாய்ந்துள்ளது.
இதில் அவருடைய முகத்தின் வலது பக்கம் கடுமையாக காயம் அடைந்துள்ளது. மேலும் தோட்டா விமானத்தை துளைத்து வாலிபரை காயப்படுத்திய காட்சிகள் இடம் பெற்றிருந்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இதனை அடுத்து விமானம் தரையிறங்கியதும் அந்த வாலிபர் உடனடியாக சிகிச்சை அளிக்க கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவ படைகள் சம்பவம் நடந்த விமான நிலையம் அருகே தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.