கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் வளைவுகள் உள்ள பகுதி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.