Categories
தூத்துக்குடி நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிக் டாக்கால் இணைந்த காதல் ஜோடியின் அட்டகாசம்… தொழிலதிபரை மிரட்டியதால் ஏற்பட்ட சோகம்..!!

டிக் டாக்கில் பழகி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஷர்மிளா என்பவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.. இவர் ‘டிக் டாக்’ செயலியில் பாடல்கள் பாடியும், நடனங்கள் ஆடியும் வீடியோ வெளியிட்டு வந்தார். இதனைப் பார்த்த துாத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதுடைய சுரேஷ் என்ற தொழிலாளி, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவரும், துாத்துக்குடியில் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு, கணவனுடன் இணைந்து கொண்டு தான் பணியாற்றிய நிறுவன உரிமையாளருக்கு மொபைல் மூலம் ஷர்மிளா போன் செய்து, ‘உங்கள் புகைப்படம் மற்றும் வீடியோவை ஆபாச படமாக, டிக் டாக் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவோம். அப்படி வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

ஆனால் இந்த மிரட்டலுக்கு பணியாத உரிமையாளர் இது குறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சுரேஷ்  மற்றும் ஷர்மிளாவை கைது செய்து, குமாரபாளையம் அழைத்து வந்தனர். மேலும் அவர்கள் இதுவரை யாரை எல்லாம் ஏமாற்றி பணம் பறித்துள்ளனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஷர்மிளா தற்போது  7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |