Categories
உலக செய்திகள்

மனித கடத்தல் வழக்கில் சிக்கிய நபர்.. 32 மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு..!!

இலங்கையில் பிறந்து, கனடாவில் வசிக்கும் ஒரு நபர் புலம்பெயர்ந்தவர்களை கடத்தியதால் அமெரிக்காவில் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் ஸ்ரீ கஜமுகம் செல்லையா என்ற 55 வயது நபர், அமெரிக்காவில் பிற நாட்டை சேர்ந்தவர்களை பணத்திற்காக கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இவர் இலங்கையிலிருந்து சட்டத்திற்கு மாறாக புலம்பெயர்ந்தவர்களை கரீபியன் வழியே அமெரிக்க நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.

அதன் படி, ஒரு படகில் புலம்பெயர்ந்தவர்கள் சுமார் 150 பேருடன் அமெரிக்காவிற்குள் செல்வதற்கு முயன்றிருக்கிறார். அப்போது Turks and Caicos அதிகாரிகளிடம் மாட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்பு கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதியன்று அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.

மேலும் இவர் இலங்கை மக்கள் அதிகமானோரை பணத்திற்காக Turks and Caicos என்ற தீவிலிருந்து பஹாமாஸ், அமெரிக்காவின் வழியே கனடாவிற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார் என்று அமெரிக்க நீதித் துறை கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றங்களை ஒப்புக் கொண்டதால், அவருக்கு இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |