Categories
உலக செய்திகள்

கல்வி அமைச்சகத்திற்கு எதிரான வழக்கு… 6 வயது சிறுமிக்கு கிடைத்த வெற்றி… பிரபல நாட்டில் ஆச்சரிய சம்பவம்..!!

எகிப்தில் கல்வி அமைச்சகத்திற்கு எதிராக 6 வயது சிறுமி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்தில் Wadi El Natroun என்ற பகுதியில் வசித்து வந்த ஆறு வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-ஆம் வகுப்பு படித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் குடும்பம் Abu-al-Matamir என்னும் இடத்திற்கு தந்தையின் பணி காரணமாக குடியேறியுள்ளனர். அதன் பிறகு சிறுமியின் தந்தை இரண்டாம் வகுப்பு சேர்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த சிறுமி இரண்டாம் வகுப்பு படிப்பதற்கு போதுமான வயது இல்லை. எனவே மீண்டும் முதல் வகுப்பில் இந்த சிறுமியை படிக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அப்படி 1-ஆம் வகுப்பில் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் மீண்டும் Wadi El Natroun பகுதியில் உள்ள பள்ளிக்கே சென்று சேர்க்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த 6 வயது சிறுமி ஒரு ஆண்டிற்கு பிறகு அந்த எகிப்திய கல்வி அமைச்சகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணையின் போது 6 வயது சிறுமி “நான் நன்றாக படிப்பேன் நன்றாக வரையவும் என்னால் முடியும். என் வகுப்பில் சிறந்த மாணவியாக இருந்தவள் நான்” என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நீதிபதியிடம் தான் வரைந்த சில படங்களையும் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளார்.

இருப்பினும் தன்னை இந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு சேர்க்க மறுத்து விட்டனர் என்று கூறி தனக்கான நியாயத்தையும் கேட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு ஆண்டிற்கு பிறகு இந்த வழக்கை தொடர காரணம் என்ன என்று சிறுமியுடன் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி “என் தந்தை ஒரு விவசாயி. எனவே அவர் மீது வழக்கு செலவுகளை சுமத்த எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே ஒரு வருடங்கள் நான் சேமித்து வைத்த 100 எகிப்திய பவுண்டுகளை கொண்டு நீதிமன்ற கட்டணத்திற்கு பயன்படுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிபதி “அந்த சிறுமிக்கு கல்வி அமைச்சகம் 3,000 எகிப்திய பவுண்டு பணத்தினை தார்மீக இழப்பீடாக அளிக்க வேண்டும்” என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |