புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி திமுக ஒன்றியச் செயலாளராக அடைக்கல மணி செயல்பட்டு வருகிறார்.. இவர் ஜூன் 15ஆம் தேதி இரவு மதுகுடித்து விட்டு போதையில் காரில் வந்த போது, வளையப்பட்டி 5ஆம் எண் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து பெண் போலீசார் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தையில் பேசியதோடு, மட்டுமில்லாமல் மோதலிலும் ஈடுபட்டுள்ளார்..
இதையடுத்து மதுபோதையில் கார் ஓட்டியதாக திமுக ஒன்றியச் செயலாளர் அடைக்கல மணி மீது பொன்னமராவதி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.. இதையடுத்து அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது இடத்தில் மது போதையில் அநாகரிகமாக நடந்து கொண்டது, உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பொன்னமராவதி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட அடைக்கல மணியின் மனைவி சுதா, பொன்னமராவதி ஒன்றிய சேர்மன் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.