திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 58 ஆக உயர்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா மொத்தம் 34 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சியில் பாதிக்கப்பட்ட 39 கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் இருவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் மீது கொரோனா பாதித்த நபர்கள் இருவர் எச்சில் துப்பி, முக கவசத்தை வீசியதாக சொல்லப்படுகிறது இதையடுத்து கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.