செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய மருத்துவத்துறை அமைச்சர் அண்ணன் மா. சுப்பிரமணியம் அவர்கள் இரண்டு முறை இதைப்பத்தி பத்திரிகை நண்பர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் பேட்டியில் என்ன சொன்னார்னா ? அவங்க சிகிச்சையில் இருக்கும்போது குளறுபடி நடந்த உடன், பிரியா அவர்கள் இறப்பதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இல்லை. நல்லா இருக்காங்க. அரசு மருத்துவமனை தன்னுடைய கடமையை செய்திருக்குன்னு சொன்னாரு மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்ரமணியம் அவர்கள்.
பிரியா அவர்கள் இறந்த பிறகு, குடும்பத்தினர் கேள்விகள் எல்லாம் கேட்க ஆரம்பித்து, அரசு மருத்துவமனையினுடைய தவறு இருக்கு. அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகு… அமைச்சர் என்ன சொன்னாங்கன்னா ? சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் பெருசு படுத்துறாங்க அப்படின்னு சொன்னாரு. இதை நாம் மறக்கக்கூடாது.
இதே அமைச்சர் அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் தவறு செய்யவில்லை என்று சர்டிபிகேட் கொடுத்த அமைச்சர், இன்னைக்கு இறந்த பிறகு இதை மாத்தி அவங்க தவறு செஞ்சிருக்காங்க என அமைச்சர் சொல்லும் போது, அவருடைய பேச்சிலே உறுதியான தன்மை இல்லை. அதனால் தான் தமிழகத்திற்கே பாடமாக இருக்க வேண்டிய இந்த கேஸ்ல, அவங்களை கைது பண்ணி என்ன நடவடிக்கை எடுத்திருக்கணுமோ ? அதை அரசு எடுக்காமல் இருக்கிறது.
எல்லா அரசு மருத்துவர்கள் தவறானவர்கள் என்று நாம் சொல்லக்கூடாது. எத்தனையோ கடினமான சூழ்நிலையில், வேறு வேறு இடத்தில அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தவறு செய்திருக்கும் போது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பயம் எப்படி வரும் ? அதனால் மருத்துவத்துறை அமைச்சர் சொல்லி இருப்பதிலேயே குளறுபடி இருக்கு. எல்லாவற்றையும் தாண்டி இந்த மருத்துவமனை என்பது முதலமைச்சர் எம்எல்ஏவாக இருக்கக்கூடிய கொளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய மருத்துவமனை என தெரிவித்தார்.