Categories
Uncategorized உலக செய்திகள்

இவ்வளோ கொடூரமாவா இருப்பாங்க…. செல்லபிராணிக்கு நேர்ந்த கொடுமை…. கைது செய்த போலீஸ்….!!

பூனை மீது அம்பு எய்து கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் Zizers என்ற கிராமத்தை சேர்ந்தவர் Patrick. இவர் தனது வீட்டில் மோனா என்ற ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பூனையின் மீது யாரோ ஒருவர் அம்பு எய்துள்ளனர். இதனைக் கண்ட Patrick ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது பூனையை எடுத்துக் கொண்டு கால்நடை மருத்துவரிடம் சென்றுள்ளார். ஆனால் அந்த பூனையை மருத்துவரால் காப்பாற்ற முடியவில்லை.

இதனால் மனமுடைந்த Patrick இப்படி ஒரு கொடூரமான செயலை எப்படி ஒருவரால் செய்ய முடியும் என நினைத்து தனது பூனைக்கு நடந்த துயரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு செல்லப்பிராணிகள் வளர்த்துவரும் மற்றவர்களையும் எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து மோனா என்ற பூனையை தான்தான் அம்பு எய்து கொன்றதாக கூறி 48 வயதுள்ள ஒரு நபர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். மேலும் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்ற காரணம் இன்னும் தெரியவரவில்லை. இதனையடுத்து போலீசார் அந்த நபரை விலங்கை துன்புறுத்தி கொன்ற குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |