Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. “துண்டு துண்டாக வெட்டுவேன்”…. திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சிறுமிக்கு கொலை மிரட்டல்….. வாலிபர் அடாவடி…. பரபரப்பு…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷமன்கஞ்ச் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த முகமது பைஸ்‌ (21) என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு ஒரு நாள் முகமது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிடில் உன்னை துண்டு துண்டாக வெட்டி கொன்று விடுவேன் என்று முகமது சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி நடந்ததை தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் வாலிபர் மீது புகார் கொடுத்துள்ளார்கள். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமதுவை கைது செய்வதற்காக அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும் முகமதுவின் குடும்பத்தினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றுள்ளது.

இதனால் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஷ்ரத்தா என்ற பெண்ணை அவருடைய காதலர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறுமியை வாலிபர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி விடுவேன் என்று மிரட்டியது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |