ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “கோமாளி” படத்தின் ட்ரெய்லரில் ரஜினியை கிண்டல் செய்யும் நோக்கில் வெளிவந்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துதுள்ள படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து உள்ளார் . இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் ரஜினி ரசிகர்கள் இப்படத்திற்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் ஐசரி கணேசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ,இதை என்னால் காமெடியாக பார்க்க முடியவில்லை என்றும் மேலும் வருத்தத்தை பதிவு செய்கிறேன் என்றும் கூறினார்.
இதன்பின் ஐசரி கணேஷ் ரஜினி எனது நண்பர் என்றும் , நான் அவரது தீவிர ரசிகர் என்றும் கூறினார் . ஆதலால் அவரை கிண்டல் செய்யும் நோக்கில் நான் எதுவும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்தார். பின்னர் அந்த காட்சிகளையும் நீக்க உள்ளதாகவும் கூறினார்.