Categories
கரூர் மாவட்ட செய்திகள்

1000 ஏக்கரில் பயிரிட்ட தென்னை மரங்களை…. வரத்து அதிகரிப்பு…. வீழ்ச்சியடைந்த விலை….!!

தேங்காயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், சேமங்கி, கவுண்டன்புதூர், முத்தனூர், நொய்யல், பேச்சிப்பாறை போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்களை பயிரிட்டுள்ளனர். இதில் தேங்காய் விழுந்தவுடன் தேங்காய் பருப்புகளை காயவைத்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தத் தேங்காய் பருப்புகள் வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது இதன் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூபாய் 122 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வாரம் ரூபாய் 110 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் வரை ஒரு கிலோ முழுத் தேங்காய் ரூபாய் 35 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் ஒரு கிலோ முழுத் தேங்காய் ரூபாய் 33 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |