Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கலெக்டரா… “அரசு பள்ளியில் படிக்கும் மகள்… குவியும் பாராட்டுக்கள்..!!

சத்தீஸ்கரில்  மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க  வேண்டும் என்று எண்ணுகின்றனர். எப்பாடுபட்டாலும் பட்டாலும் பரவாயில்லை. கஷ்டப்பட்டாவது கடன் வாங்கியாவது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாகவே தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்.

Image

ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தின்  மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளைஅரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். அவர் யார் என்றால் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த  ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று,  தற்போது சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி வரும் அவனிஷ் ஷரன். இவர் இவர் தனது குழந்தையை அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.

Image

இதுதொடர்பாக  ட்விட்டரில் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் கலெக்டர் அவனிஷ் ஷரனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பலரும் பெருமையாக பல்வேறு விதமான கமெண்ட்களை செய்து கொண்டு வருகின்றனர்.

Imageஅதில் ஒருவர் குறிப்பிட்டதாவது, மாவட்ட ஆட்சியர் அவனிஷ் ஷரன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். இது போன்று மற்ற மாவட்ட ஆட்சியர்கள், உயர் பதவியில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் அரசின் திட்டங்களை பயன்படுத்தினால் அதன் தரம் உயரும் என்று பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு நாமும் பாராட்டுக்களை தெரிவிப்போம்.

Categories

Tech |