Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நல்லா தான் வந்துட்டு இருந்துச்சு… திடீர்னு கண்ட்ரோல் இல்லாம போயிடுச்சு… காவல்துறையினரின் செயல்…!!

கார்களை ஏற்றி கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கணவாய் வழியாக மராட்டிய மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கார்களை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டுனர் பிரவின் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் லாரி கட்டமேடு அருகாமையில் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த சாலையில் தாறுமாறாக ஓடி முன்புறத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து இவ்விபத்தில் சரக்கு வேன் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் காலி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைவாக அப்பகுதிக்கு சென்று விபத்தில் சிக்கிய 3 பேரையும் கைப்பற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டேங்கர் லாரி, சரக்கு வேன் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளனர்.

Categories

Tech |