திருமணம் நடக்கும் இடத்திற்குள் திடீரென கர்ப்பமான பசு ஓன்று புகுந்து கன்றுக்குட்டியை ஈன்றெடுத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் போர்ட்லாண்ட் பகுதியில் ஜெசா லாஸ், பென் லாஸ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கொரோனா காரணமாக குறைவானவர்களே கலந்து கொண்டுள்ளனர். அதனால் ஜெசா லாஸ் தனக்கு சொந்தமான பண்ணையில் இந்த மன விழாவை ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த மணவிழா நடந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பசு திருமண விழா நடக்கும் இடத்திற்குள் புகுந்தது.
இதனையடுத்து கர்ப்பமாக இருந்த அந்த பசு அனைவர் முன்னிலையிலும் ஒரு கன்று குட்டியை ஈன்று எடுத்துள்ளது. இதனைப் பார்த்த அனைவரும் பரவசமடைந்துள்ளனர். மேலும் 1200 டாலர் மதிப்புள்ள வெள்ளை நிற உடையில் இருந்த மணப்பெண் சேற்றில் இருந்த கன்று குட்டியை எடுத்து அணைத்துக் கொண்டார். இதனால் அவருடைய திருமண உடை அழுக்காக மாறியது. ஆனால் அவர் உடையை மாற்றிக் கொள்ளாமல் அதே உடையில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது பண்ணையில் உருவான பாலில் செய்யப்பட்ட கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.