இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் .
நாடளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இந்தியா முழுவதும் தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். மத்தியில் ஆட்சியை தக்க வைக்க பிஜேபி_யும் , ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் அடுத்தடுத்து பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
நடைபெற இருக்கும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்று தேசிய கட்சிகள் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். பி-பல்வேறு நட்சத்திரங்களாக கருதப்படும் சினிமா பிரபலம் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவின. இந்த பின்னணியில் இன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் அதிமுக_வில் இணைந்தார்.