மான்செஸ்டர் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் சடலம் ஆற்றங்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் பகுதியில் கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் கிறிஸ்டினா ரேக் என்ற 48 வயது பெண் திடீரென்று காணாமல் போயுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதியன்று நாயுடன் வாக்கிங் சென்ற சிலர் ஆற்றங்கரையில் சடலம் பாதியாக கிடப்பதை கண்டுள்ளனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின்பு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அது கிரிஸ்டினாவின் உடல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கிரிஸ்டினா காணாமல் போனதற்கு என்ன காரணம்? என்று அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவில்லை.
மேலும் கிரிஸ்டினாவின் சகோதரர் மார்ட்டின், எங்களுக்குள் குடும்ப பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். எனவே காவல்துறையினர் அவர் காணாமல் போவதற்கு முன் காணப்பட்ட பகுதியில் தீவிரமாக தேடியும், ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.