ஜெர்மனியில் பல கிரிமினல் வழக்குகளையும் சந்தித்த பெடரல் உயர்நீதிமன்றத்திற்கு வித்யாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள பெடரல் உயர்நீதிமன்றம் கொலைகார பிசினஸ் மேன்கள், காவல்துறையினரை கொல்பவர்கள், தீவிரவாதிகள் உள்ளிட்ட பயங்கரமான வழக்குகள் பலவற்றையும் சந்தித்துள்ளது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த நீதிமன்றத்திற்கு வித்தியாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. மேலும் அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது பெர்லினை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு தோட்டத்திற்குள் எட்டிப்பார்த்த மற்றொருவருடைய மரத்தின் கிளைகளை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மரத்தை வளர்த்தவர் மரத்தின் கிளைகளை வெட்டியவர் மீது பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் மரத்திற்கு சொந்தமானவர் கிளைகளை வெட்டியதால் புயல் வரும் போது மரம் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்றும், அந்த மரம் இறந்து போக வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் மரத்தை வெட்டியவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தன் வீட்டு தோட்டத்திற்குள் எட்டி பார்த்த மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளதாக ஜெர்மன் சிவில் சட்டத்தின்படி, பெடரல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.