எலிகளைப் பிடிப்பதற்காக விவசாயி வைத்த கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் சிக்கியுள்ளது.
நாகை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளான பிரதாபராமபுரம், வேளாங்கண்ணி, காமேஸ்வரம், பொதிகை நல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு போன்ற பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் எலிகள் உள்ளிட்டவைகள் விளை நிலங்களில் புகுந்து காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றது.
அவற்றை பிடிப்பதற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களில் கூண்டுகளை வைத்துள்ளனர். அவ்வாறு ஒரு விவசாயி தனது விளைநிலத்தில் வைத்திருந்த ஒரு கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் ஒன்று சிக்கியுள்ளது. இது தென்னை மரங்களில் உள்ள தேங்காயை ஓட்டை போட்டு தண்ணீரை குடித்துவிடுமாம்.
இதனால் தேங்காய் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து நாகை மாவட்ட வனப்பாதுகாவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட வன பாதுகாவலர் கலாநிதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். இதனையடுத்து விவசாயிகளிடமிருந்து மரநாய் மீட்கப்பட்டு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டுள்ளது.