Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து… போலீசாரை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்…!!

ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து மருத்துவர் ஒருவர் காவல்துறையினரை ஆபாசமாகத் திட்டி, வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல் எல்லைகளான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனைச்சாவடி, ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடி, கேரள மாநில எல்லைகளான லோயர்கேம்ப், முந்தல், கம்பம் ஆகிய சோதனைச்சாவடிகளில் புதிதாக வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடியில் காவல் துறையினர் நேற்று வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கிவந்த காரை நிறுத்தி போலீசார் சைகை காட்டியுள்ளனர்.. ஆனால் காரை நிறுத்தாமல் போலீசாரை இடித்துத் தள்ளுவதுபோல வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

அதனால் அந்தக் காரை பின்தொடர்ந்த போலீசார் சிறிது தூரத்தில் வேகமாக சென்று மடக்கிப் பிடித்தனர். அதன்பின் காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணையில், காரை ஓட்டிவந்தவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவரும் சாலமன்ராஜா என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும், அவருடன் வந்தவர்களையும் பரிசோதனை செய்வதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு மறுப்பு தெரிவித்த சாலமன்ராஜா, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த வாக்குவாதத்தில் சாலமன்ராஜா காவல்துறையினரை ஆபாசமாகப் பேசி, தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காவல் துறையினர் அவரையும், உடன் வந்தவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனைப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |