சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக வரையப்பட்ட வட்டத்திற்குள் நாய் நின்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல் அனைத்து மாவட்ட நிர்வாகமும் மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை வலியுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடையில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்பதற்காக போடப்பட்ட வட்டத்திற்குள் நாய் ஒன்று நின்று சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.