Categories
பல்சுவை

உச்சா போய் ஊரையே காப்பாத்துச்சா….? இந்த அதிசயத்தை நீங்களே பாருங்க….!!

நாய்கள் என்று சொன்னால் நமக்கு நன்றியும் விசுவாசமும் தான் நினைவிற்கு வரும். ஆனால் நாய்கள் மிகவும் புத்திசாலியும் கூடதான். அதற்கு சிறந்த உதாரணம் இதுதான். 1941 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இரண்டாவது உலகப்போர் ஆரம்பித்த இரண்டு வருடத்தில் பிரிட்டன் நாட்டின் மீது ஏராளமான குண்டுகள் வீசப்பட்டது. அதில் ஒரு வெடிகுண்டு ஜூலியானா என்கிற நாயின் உரிமையாளர் இருக்கின்ற வீட்டின் மேல் விழுந்திருக்கிறது. அந்த குண்டை பார்த்த ஜூலியானா நாய் என்ன நினைத்தது என்று தெரியவில்லை.

திடீரென்று அந்த வெடிகுண்டின் மேல் சிறுநீர் கழித்து அதனை செயல் இலக்க வைத்துள்ளது. அதன்பின் 3 வருடத்திற்கு பிறகு 1944-வது வருடம் தனது உரிமையாளரின் குடும்பத்தினரை ஒரு தீ விபத்தில் இருந்து காப்பாற்றி மாஸ் காட்டியிருக்கிறது இந்த ஜூலியானா. இந்த இரண்டு காரணத்திற்காக ஜூலியானாவிற்கு BLUE CROSS-இலிருந்து மெடல் கொடுக்கப்பட்டது. இதற்காகத்தான் நாய்களை நன்றிக்கும் விசுவாசத்திற்கும் உதாரணமாக சொல்கிறோம்.

Categories

Tech |