Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த நாய்…. 3 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட தருணம்…. வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்….!!

பாழடைந்த கிணற்றுக்குள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த நாயை தற்போது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கிராமத்தில் காவலர் குடியிருப்பு ஒன்று உள்ளது. அதன் அருகில் 60 அடி ஆழ பாழடைந்த கிணறு ஒன்று இருக்கிறது. இதன் அருகில் இருந்த ஒரு கட்டிட தொழிலாளி நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து உள்ளது. அதனை மீட்க அவர் பல வழிகளில் முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அவரால் நாயை மீட்க முடியவில்லை. அதனால் சோகத்தில் இருந்த அவர் நாயை அங்கேயே விட்டுவிட்டு வீட்டை காலி செய்து சென்றுள்ளார். இதனையடுத்து அந்தக் கிணற்றுக்குள் சில சமயங்களில் நாயின் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் ஏதாவது உணவினை தூக்கி போட்டுவிட்டு செல்வார்களாம். அந்த உணவினை நாய் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளது. இதனையடுத்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் இதைக்குறித்து கேள்விப்பட்டுள்ளனர்.

உடனடியாக அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து 60 அடி ஆழக் கிணற்றுக்குள் இறங்கி அந்த நாயை மீட்டுள்ளனர். அதன்பின் அந்த நாய்க்கு தண்ணீர், பிஸ்கட் போன்றவை கொடுக்கப்பட்டது. இந்த நாயின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த பாழடைந்த கிணற்றுக்குள் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடந்த நாயை மீட்பதற்காக யாராவது தீயணைப்புத் துறையினரும் தகவல் அளித்து இருந்தால் அப்போதே நாயை காப்பாற்றியிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |