எஜமானனுக்காக வயலில் வேலை செய்யும் நாய் குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.
மனோஜ் சர்மா என்பவர் தனக்கு உதவிய தன் நாய் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குட்டை இனத்தைச் சேர்ந்த வெள்ளை நிற நாய் ஒன்று சோழ பயிர்களை தனது கூர்மையான பற்களால் வெட்டி சாய்கின்றது.
நாய் வேக வேகமாக வேலை செய்தாலும் ஒரு சோழ கதிர்கள் கூட கீழே சிந்தாமல் அழகாக பயிர்களை அறுவடை செய்து அசத்துகிறது. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த விவசாயிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் தன்னை வளர்த்த விவசாய குடும்பத்தினருக்காக இப்படி நாய் ஒன்று வயலில் பாடுபடும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.